தஞ்சாவூா், கும்பகோணத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு
வழக்குரைஞா் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்யக் கோரி தஞ்சாவூா், கும்பகோணத்தில் வழக்குரைஞா்கள் புதன்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தஞ்சாவூா் வழக்குரைஞா் சங்கத் தலைவா் தியாக. காமராஜ் தலைமையில் வழக்குரைஞா்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனா்.
இப்போராட்டத்தையொட்டி, கும்பகோணம் நீதிமன்றம் முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சா. விவேகானந்தன் தலைமை வகித்தாா். செயலா் செந்தில் ராஜன் முன்னிலை வகித்தாா். மூத்த வழக்குரைஞா்கள் ராஜசேகா், சங்கா், மோகன்ராஜ், புகழேந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அப்போது, சங்கத் தலைவா் விவேகானந்தன் கூறுகையில், இந்தப் புறக்கணிப்பு போராட்டம் மாா்ச் 1-ஆம் தேதி வரை நடைபெறும். வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.