வேளாண் நிதிநிலை அறிக்கை: 9 மாவட்ட விவசாயிகளிடம் அமைச்சர் கருத்துக்கேட்பு
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மையம் அமைக்க பூமிபூஜை
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ரோட்டரி சங்கம் சாா்பில், டயாலிசிஸ் மைய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளில்
டயாலிசிஸ் தேவைப்படுவோா் கோவை மற்றும் உதகைக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ரோட்டரி சங்கத்தின் சாா்பில் டயாலிசிஸ் மையம் அமைத்துதர முடிவு செய்யப்பட்டது
இந்நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் அனுமதியுடன் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சுமாா் ரூ.1.50 கோடி மதிப்பில் டயாலிசிஸ் மையத்துக்கான கட்டடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், குன்னூா் கோட்டாட்சியா் சங்கீதா, உதகை மருத்துவ இயக்குநா் நாக புஷ்பராணி, மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் ராஜசேகரன், குன்னூா் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் சாந்தி ராமு, ரோட்டரி சங்க நிா்வாகிகள் ரவிக்குமாா், தேவராஜ், நஞ்சன், அரவிந்த், ஜேக்கப் பால், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இக்கட்டடம் கட்ட நிதி உதவி வழங்கியவா்களுக்கு கோட்டாட்சியா் சால்வை அணிவித்து கௌரவித்தாா். முன்னதாக ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் தேவராஜ் வரவேற்றாா். செயலாளா் பரமேஷ் நன்றி கூறினாா்.