அருணாசல் நெடுஞ்சாலை திட்டம் விரைவில் நிறைவடையும்: கிரண் ரிஜிஜு
அருணாச்சலப் பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களையும் இணைக்கும் நெடுஞ்சாலை திட்டம் விரைவில் நிறைவடையும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
கம்லே மாவட்டத்தில் உள்ள போசிம்லாவில் நியிஷி பழங்குடியினரின் விழாவான நியோகுமு யூல்லோ முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரும் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கிரண் ரிஜிஜு கூறுகையில்,
மாநிலத்தின் 26 மாவட்டத் தலைமையகங்களையும் இணைக்கும் அருணாசல் நெடுஞ்சாலை நிறைவடையும் தறுவாயில் உள்ளது.
இது மாநிலத்தின் அனைத்து மாவட்டத் தலைமையகங்களையும் தடையின்றி இணைக்கும், அணுகலை மேம்படுத்தும் மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும்.
சுமார் ரூ.42,000 கோடி மதிப்பில் கட்டப்படும் மிகப்பெரிய நெடுஞ்சாலை திட்டம், இந்தியாவில் மிகப்பெரியளவிலான முதல் திட்டமும் இதுவேயாகும் என்று அவர் கூறினார்.