அருணாசல் நெடுஞ்சாலை திட்டம் விரைவில் நிறைவடையும்: கிரண் ரிஜிஜு
கௌரி சங்கர் கோயிலில் தில்லி முதல்வர் வழிபாடு!
மகாசிவராத்திரியை முன்னிட்டு கௌரி சங்கர் கோயிலில் தில்லி முதல்வர் ரேகா குப்தா வழிபாடு மேற்கொண்டார்.
நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கௌரி கிருஷ்ணா கோயிலில் தில்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் ஆகியோர் கோயிலில் வழிபாடு செய்தனர்.
இந்த புனிதமான நாளில் சிவ பக்தர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிவன் பார்வதி தேவியும் இணைந்து அனைவரையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்றும், அவர்களின் தெய்வீக அருள் நமது தேசத்திற்கும் தில்லி மக்களுக்கும் செழிப்பைக் கொண்டுவரட்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்று அவர் கூறினார்.
கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் ஜண்டேவாலன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.