அரசுப்பேருந்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை: பாஜக அரசுக்கு எதிராக மகாராஷ்டிரத்தி...
லக்கி பாஸ்கர் ஓடிடியிலும் சூப்பர் ஹிட்!
லக்கி பாஸ்கர் திரைப்படம் ஓடிடியிலும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
நடிகர் தனுஷின் வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி செளதரி, ராம்கி ஆகியோர் நடித்த லக்கி பாக்ஸர் திரைப்படம் தீபாவளி பண்டிகைகையொட்டி கடந்தாண்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியானது.
வங்கியில் பணிபுரியும் அதிகாரியான பாஸ்கர் (துல்கர் சல்மான்) பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் அரசை, வங்கி நிர்வாகத்தை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார் என்கிற கதையாக உருவான இப்படம் இந்தியளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க: ‘படமல்ல... கவிதை’ விண்ணைத் தாண்டி வருவாயா வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு !
குறிப்பாக, தமிழ் மற்றும் தெலுங்கில் படத்திற்குக் கிடைத்த வரவேற்பால் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டன.
இதுவே துல்கர் சல்மானின் முதல் ரூ. 100 கோடி வசூல் திரைப்படமாகும். சரியான பான் இந்திய நடிகர் என அடையாளப்படுத்தப்பட்ட துல்கர் சல்மான், தெலுங்கில் மகாநதி, சீதா ராமம் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக லக்கி பாஸ்கரிலும் பெரிய வெற்றியைப் பதிவு செய்தார்.

தொடர்ந்து, கடந்த நவ. 28 ஆம் தேதி இப்படம் நெட்பிளிக்ஸில் வெளியானது. இந்த நிலையில், ஓடிடியில் வெளியாகி 13 வாரங்கள் டிரெண்டிங்கில் இருந்த முதல் தென்னிந்திய திரைப்படம் என்கிற சாதனையைப் பெற்றுள்ளது லக்கி பாஸ்கர்!