மெஸ்ஸி உள்பட 2 இன்டர் மியாமி வீரர்களுக்கு அபராதம்..!
எம்எல்எஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு மெஸ்ஸி உள்பட 2 இன்டர் மியாமி வீரர்களுக்கு அபராதம் விதித்துள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அமெரிக்காவின் சேஸ் திடலில் 2ஆவது லெக் சுற்றில் கான்ஸ்டாஸ் சிட்டியை 3-1 வீழ்த்தியது.
இன்டர் மியாமி அணிக்காக முதல் கோலை மெஸ்ஸி ஆட்டத்தின் 19ஆவது நிமிஷத்தில் அடித்து அசத்தினார்.
இந்தப் போட்டியில் எதிரணியினரின் கழுத்தில் கை வைத்ததால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், விடியோவில் மெஸ்ஸி ஆக்ரோஷமாக எதுவும் செய்யவில்லை. வெறுமனே கை வைத்ததற்காகவா இப்படி அபராதம் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதேபோல் இன்டர் மியாமி அணியின் மற்றுமொரு வீரர் லூயிஸ் சௌரேஸுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவர் சிறிது ஆக்ரோஷமாகத்தான் எதிரணியினரின் கழுத்தில் கை வைத்து சண்டையிடுவார்.
அபராதத் தொகை குறித்து எம்எல்எஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு எதுவும் தெரிவிக்கவில்லை.
இண்டர் மியாமி அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. அடுத்த போட்டி மார்ச்.6ஆம் தேதி நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.