வரலாறு படைத்த ஆப்கன் வீரர்..!
சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர் இப்ராஹிம் ஸத்ரான் சதமடித்து அசத்தியுள்ளார்.
குரூப் பி பிரிவில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 8-வது போட்டியில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற ஆப்கான் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. 40 ஓவர்கள் முடிவில் ஆப்கன் அணி 212/5 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க வீரர் இப்ராஹிம் ஸத்ரான் 106 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியில் சதமடித்த முதல் ஆப்கன் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஓமர்சாய் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜத்ரான் 109 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்ட்.
இங்கிலாந்து சார்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
Ibrahim Zadran rises to the occasion with a crucial ton in a must-win game against England #ChampionsTrophy#AFGvENG ✍️: https://t.co/6IQekpiWp0pic.twitter.com/vqUZvIe6Hx
— ICC (@ICC) February 26, 2025