செய்திகள் :

ஒருநாள் தரவரிசை: விராட் கோலி முன்னேற்றம்! முதலிடத்தில் கில்!

post image

ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி முன்னேற்றம் பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தவாரத்துக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியல் இன்று(பிப்.26) வெளியிடப்பட்டுள்ளது. 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் இந்தப் பட்டியலில் முன்னேற்றம் பெற்றுள்ளனர்.

இதையும் படிக்க:வாழ்வா? சாவா? போட்டியில் இங்கிலாந்து - ஆப்கன்! அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய விராட் கோலி ஒரு இடங்கள் முன்னேறி 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சதம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 46 ரன்கள் விளாசிய ஷுப்மன் கில் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

ஒருநாள் தரவரிசையில் முதல் 10 இடங்கள்

  1. ஷுப்மன் கில் -817 புள்ளிகள்

  2. பாபர் அசாம் - 770 புள்ளிகள்

  3. ரோஹித் சர்மா -757 புள்ளிகள்

  4. ஹென்ரிச் கிளாசன் -749 புள்ளிகள்

  5. விராட் கோலி - 743 புள்ளிகள்

  6. டேரில் மிட்செல் -717 புள்ளிகள்

  7. ஹாரி டெக்டர் -713 புள்ளிகள்

  8. சரித் அசலங்கா -694 புள்ளிகள்

  9. ஸ்ரேயாஸ் ஐயர்-679 புள்ளிகள்

  10. ஷாய் கோப் - 672 புள்ளிகள்

இதையும் படிக்க: சர்வதேச கிரிக்கெட்டில் மிகப் பெரிய வீரராக உருவெடுக்கும் ஷுப்மன் கில்: ஹாசிம் ஆம்லா

ஆப்கன் அதிரடி பேட்டிங்..! இங்கிலாந்துக்கு 326 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் ரன்கள் எடுத்தது.அதிரடியாக விளையாடிய இப்ரஹிம் ஸத்ரான் 177 ரன்கள் அடித்து அசத்தினார். இங்கிலாந்து சார்பில் ... மேலும் பார்க்க

சென்னையில் தோனி! இதுதான் கடைசி ஐபிஎல்? தோனி சூசகம்!

சென்னை : ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணியின் மூத்த வீரர் மகேந்திர சிங் தோனி இன்று(பிப். 26) சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய தோனி, வழக்கம... மேலும் பார்க்க

வரலாறு படைத்த ஆப்கன் வீரர்..!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர் இப்ராஹிம் ஸத்ரான் சதமடித்து அசத்தியுள்ளார். குரூப் பி பிரிவில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 8-வது போட்டியில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்... மேலும் பார்க்க

வாழ்வா? சாவா? போட்டியில் இங்கிலாந்து - ஆப்கன்! அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 8-வது போட்டியில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் மோதும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானின் கராச்சி, ராவல்பிண்டி, ல... மேலும் பார்க்க

ரஞ்சி கோப்பையை வெல்லப் போவது யார்? டாஸ் வென்ற கேரளம் பந்துவீச்சு!

ரஞ்சி கோப்பையின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற கேரளம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் விதர்பாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கேரள கேப்டன் சச்சின் பேபி முத... மேலும் பார்க்க

தில்லி அசத்தல் பந்துவீச்சு: குஜராத் ஜெயண்ட்ஸ் 127 ரன்கள் சேர்ப்பு!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தில்லி அணியின் கேப்டன் மெக்-லானிங் முதலில் பந்துவீசுவதா... மேலும் பார்க்க