செய்திகள் :

America: 'தேர்தலில் போட்டியிடும் விவேக் ராமசாமி; ட்ரம்ப், மஸ்க் ஆதரவு' - எங்கு, என்ன பதவி?

post image

விவேக் ராமசாமி - தொழிலதிபர், இந்தியா வம்சாவளி, ட்ரம்ப் ஆதரவாளர், எலான் மஸ்க்கின் நண்பர்... என்பதையெல்லாம் தாண்டி இவருக்கு இனி புதிய வேறொரு அடையாளம் உருவாக வாய்ப்பு அமைந்திருக்கிறது.

அமெரிக்காவின் ஓஹியோவில் பிறந்தவர் விவேக் ராமசாமி. இந்த மாகாணம் தற்போது அடுத்த ஆளுநர் தேர்தலை சந்திக்க உள்ளது. அந்தத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்திருக்கிறார் விவேக் ராமசாமி.

இதுக்குறித்து அவர் பேசுகையில், "ஓஹியோவின் அடுத்த ஆளுநர் தேர்தலில் போட்டியிடுவதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன். நான் ஓஹியோவை புதிய தொழில்களை தொடங்குவதற்கான அமெரிக்காவின் டாப் மாகாணமாய் மாற்றுவேன். முதலாளித்துவதும், அதிகாரம் உள்ளிட்ட அனைத்திலும் ஓஹியோவை டாப் நாடாக மாற்றுவேன்" என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எலான் மஸ்க்கின் பங்கு எப்படி உள்ளதோ, அதே மாதிரி விவேக் ராமசாமிக்கு ட்ரம்ப்பின் வெற்றியில் பங்கு உண்டு.

விவேக் ராமசாமி

விவேக் ராமசாமி ஆளுநர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ட்ரம்ப், "ஓஹியோ கவர்னர் பதவிக்கு விவேக் ராமசாமி போட்டியிடுகிறார். எனக்கு அவரை நன்கு தெரியும், அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ளேன். அவர் ஸ்பெஷலானவர். அவர் இளமையானவர், வலிமையானவர் மற்றும் புத்திசாலி! விவேக் மிகவும் நல்ல மனிதர், அவர் நம் நாட்டை உண்மையாக நேசிக்கிறார். அவர் ஓஹியோவின் சிறந்த ஆளுநராக இருப்பார், உங்களை ஒருபோதும் வீழ்த்த மாட்டார், மேலும் என்னுடைய முழுமையான மற்றும் மொத்த ஆதரவு அவருக்கு தான்!" என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எலான் மஸ்க், "குட் லக், என்னுடைய முழு ஆதரவும் உங்களுக்கே!" என்று பதிவிட்டுள்ளார்.

ஓஹியோ ஆளுநர் தேர்தல் அடுத்த வருடம் தான் நடத்தப்பட வேண்டும். ஆனால், தற்போது ஓஹியோவின் கவர்னராக இருக்கும் ஜான் ஹஸ்டெட் அமெரிக்க செனட் பதவியை ஏற்பதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதால் இப்போது தேர்தல் நடக்க உள்ளது.

ஜனவரி மாதமே இந்த பதவி குறித்து பேசப்பட்டது. அப்போது முதல் இப்போது வரை அந்த மாநிலத்தின் பொருளாளர் மற்றும் செயலாளர் விவேக் ராமசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம், ஓஹியோவின் ஆளுநர் பதவிக்காக தொழிலதிபர் ஒருவரும், அம்மாகாணத்தின் முன்னாள் சுகாதார இயக்குநரும் போட்டியிடுகின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

``இந்தியா கூட்டணி என்பது சேதமடைந்த, பயன்படாத வண்டி!” – புதுச்சேரி அதிமுக கூறும் காரணமென்ன ?

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி அ.தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழக... மேலும் பார்க்க

Bihar: மக்கானா டு எதிர்க்கட்சிகள் அட்டாக் - 8 மாதங்களுக்கு முன்னே தேர்தல் வியூகத்தை தொடங்கிய மோடி

இந்த ஆண்டு இரண்டே மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் தான். அதில் ஒன்று டெல்லி சட்டப்பேரவை தேர்தல். அது நடந்து முடிந்து பாஜக 27 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி வாகை சூடி முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டு அந்... மேலும் பார்க்க

"திராவிட வெறுப்பை ஒரு தமிழச்சியாக ஏற்க முடியவில்லை" - பாஜக-வில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார்

நடிகை ரஞ்சனா நாச்சியார் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "விடைபெறுகிறேன்... கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பாரதிய ஜனதா கட்சி... மேலும் பார்க்க

Israel: ஹமாஸ் வீரருக்கு முத்தம் கொடுக்க காரணம் இதுதான் - இஸ்ரேல் பிணைக்கைதி சொல்வது என்ன?

ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிப்ரவரி 22 அன்று 6 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் இஸ்ரேலைச் சேர்ந்த ஒமர் ஷெம் தொவ் என்ற ஒரு நபர் இன்று உலகின் கவனத்தை ஈர்... மேலும் பார்க்க

Jaishankar: "அமெரிக்காவின் நிதியுதவி தவறாகப் பயன்படுத்தப்பட்டதா?" - ஜெய்ஷங்கர் சொல்வதென்ன?

இந்தியாவின் வாக்காளர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக அமெரிக்கா அளித்து வந்த நிதி, இந்தியத் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்தியாகக் கூறப்படும் கருத்துகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் பதிலள... மேலும் பார்க்க