செய்திகள் :

``இந்தியா கூட்டணி என்பது சேதமடைந்த, பயன்படாத வண்டி!” – புதுச்சேரி அதிமுக கூறும் காரணமென்ன ?

post image

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி அ.தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன், ``மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை  எதிர்க்க துணிவில்லாமல், தமிழகத்தில் முதுகெலும்பில்லாத முதலமைச்சராக இருக்கிறார் ஸ்டாலின். திராவிட பாரம்பர்யமான இருமொழிக் கொள்கையில் உறுதியாக இல்லாமல் தள்ளாட்டத்துடன் அந்தப் பிரச்னையை எதிர்கொள்கிறார்.

எதிர்கட்சிகளின் நியாயமான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி அடக்கு முறையை ஏவி வருகிறார். அரசியல் தலைவர்களை ஒருமையில் விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். அதே வழியில் தி.மு.க-வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் நாராயணசாமியும் செயல்பட்டு வருகிறார்.

நாராயணசாமி

புதுச்சேரியில் பா.ஜ.க - என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதுடன், சி.பி.ஐ-க்கு புகாரளிப்பேன் என்று வெற்று வாய்ஜாலம் காட்டி வருகிறார். ஒரு குற்றச்சாட்டை ஆதாரத்துடன் கூறும் தகுதி கூட நாராயணசாமிக்கு இல்லை. பா.ஜ.க - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு மக்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்த அரசாக இருக்கிறது. இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸும், தி.மு.க-வும் மாறி மாறி தங்களுக்குள் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றன.

இந்தியா கூட்டணி என்பது முழுவதும் சேதமடைந்த, பயன்படாத வண்டி. இதை புரிந்துகொள்ளாமல் ஒருவரை ஒருவர் சாடி வருகின்றனர். மாண்புமிகு அம்மாவின் மறைவுக்குப் பிறகு தி.மு.க-வுடன் சேர்ந்து அ.தி.மு.க-வை அழிக்க நினைத்த துரோகிகளின் சதிகளை முறியடித்து கழகத்தை மீட்டெடுத்தவர் எடப்படியார். துரோகிகளுக்கு கட்சியில் எப்போதும் இடமில்லை. கடந்த தேர்தலில் பலாப்பழத்தைப் போல, தற்போது வேறு ஏதாவது பழத்தை துரோகிகள் தேடிக் கொள்வார்கள்” என்றார்.

America: 'தேர்தலில் போட்டியிடும் விவேக் ராமசாமி; ட்ரம்ப், மஸ்க் ஆதரவு' - எங்கு, என்ன பதவி?

விவேக் ராமசாமி - தொழிலதிபர், இந்தியா வம்சாவளி, ட்ரம்ப் ஆதரவாளர், எலான் மஸ்க்கின் நண்பர்... என்பதையெல்லாம் தாண்டி இவருக்கு இனி புதிய வேறொரு அடையாளம் உருவாக வாய்ப்பு அமைந்திருக்கிறது. அமெரிக்காவின் ஓஹிய... மேலும் பார்க்க

Bihar: மக்கானா டு எதிர்க்கட்சிகள் அட்டாக் - 8 மாதங்களுக்கு முன்னே தேர்தல் வியூகத்தை தொடங்கிய மோடி

இந்த ஆண்டு இரண்டே மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் தான். அதில் ஒன்று டெல்லி சட்டப்பேரவை தேர்தல். அது நடந்து முடிந்து பாஜக 27 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி வாகை சூடி முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டு அந்... மேலும் பார்க்க

"திராவிட வெறுப்பை ஒரு தமிழச்சியாக ஏற்க முடியவில்லை" - பாஜக-வில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார்

நடிகை ரஞ்சனா நாச்சியார் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "விடைபெறுகிறேன்... கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பாரதிய ஜனதா கட்சி... மேலும் பார்க்க

Israel: ஹமாஸ் வீரருக்கு முத்தம் கொடுக்க காரணம் இதுதான் - இஸ்ரேல் பிணைக்கைதி சொல்வது என்ன?

ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிப்ரவரி 22 அன்று 6 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் இஸ்ரேலைச் சேர்ந்த ஒமர் ஷெம் தொவ் என்ற ஒரு நபர் இன்று உலகின் கவனத்தை ஈர்... மேலும் பார்க்க

Jaishankar: "அமெரிக்காவின் நிதியுதவி தவறாகப் பயன்படுத்தப்பட்டதா?" - ஜெய்ஷங்கர் சொல்வதென்ன?

இந்தியாவின் வாக்காளர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக அமெரிக்கா அளித்து வந்த நிதி, இந்தியத் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்தியாகக் கூறப்படும் கருத்துகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் பதிலள... மேலும் பார்க்க