அஸ்ஸாமில் அம்பானி, அதானி ரூ.50,000 கோடி முதலீடு!
வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யப்போவதாக தொழிலதிபர்கள் அதானியும் அம்பானியும் தெரிவித்துள்ளனர்.
அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டியில் ‘அஸ்ஸாம் உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு 2.0 மாநாடு’ நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இன்று(பிப். 25) கலந்துகொண்ட இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானியும் கௌதம் அதானியும் அஸ்ஸாமில் தங்கள் இரு குழுமங்களும் தனித்தனியே ரூ. 50,000 கோடி முதலீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் விமான நிலையம், சிமெண்ட் தொழிற்சாலை, எரிவாயு, மின்சார திட்டங்கள் உள்பட பல்வேறு துறைகளில் அதானி குழுமம் ரூ. 50,000 கோடி முதலீடு செய்யப்போவதாக தொழிலதிபர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.
