பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி
பாஜக ஆட்சியில் அஸ்ஸாமின் பொருளாதாரம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை இன்று (பிப். 25) பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார். இதன் தொடக்க விழாவில் அந்த மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்பட அமைச்சர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்றுப் பேசினர்.
உச்சி மாநாட்டை தொடக்கிவைத்து பிரதமர் மோடி பேசியதாவது,
அஸ்ஸாம் முதலீட்டாளர்களுக்கு விருப்பமான இடமாக மாறியுள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மை, நல்லாட்சி மற்றும் சீர்திருத்தங்களே இந்தியாவின் மீதான உலக நம்பிக்கையை அதிகரிக்கக் காரணமாகும்.
வடகிழக்கு மாநிலங்களின் உற்பத்தி மையமாக அஸ்ஸாம் மாறும். உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், இந்தியாவின் பொருளாதாரம் நல்ல வளர்ச்சியடைந்து வருகிறது. பாஜக ஆட்சியில் அஸ்ஸாமின் பொருளாதாரத்தின் மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக இரட்டிப்பாகியுள்ளது. இந்தியாவின் செழிப்பில் கிழக்கு இந்தியா முக்கிய பங்கு வகித்தது என்பதற்கு வரலாறு சாட்சி என்று அவர் கூறினார்.