கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
திடலில் அத்துமீறி நுழைந்தவருக்கு வாழ்நாள் தடை..! பாதுகாப்பை பலப்படுத்தும் பாகிஸ்தான்!
ராவல்பிண்டி திடலில் அத்துமீறி நுழைந்த நபரால் சாம்பியன்ஸ் டிராபியில் பாதுகாப்பை பலப்படுத்த பிசிபி முடிவெடுத்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நடத்துகின்றன.
நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் இந்தமுறை அரையிறுதிக்குத் தேர்வாகாமல் வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (பிப்.24) நியூசிலாந்து, வங்கதேசம் விளையாடிய போட்டியில் ரசிகர் ஒருவர் நியூசி. வீரர் ரச்சின் ரவீந்திராவை கட்டியணைத்தார்.

அவரைக் கைது செய்த காவல்துறையினர் இனிமேல் அவர் பாகிஸ்தானில் எந்த ஒரு திடலிலும் கிரிக்கெட் போட்டியை பார்க்க அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பை பலப்படுத்தும் பாகிஸ்தான்
இந்நிலையில் இந்தச் சம்பவத்தை அடுத்து பிசிபி நிறுவனம் கூறியதாவது:
நேற்றையப் போட்டியில் நடந்த விஷயத்தை பிசிபி முக்கியமாக எடுத்துக்கொள்கிறது. வீரர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு முதன்மையானது. பொறுப்பான நிறுவனமாகிய நாங்கள் உள்ளூர் பாதுகாப்பு முகமையிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.
இனிமேல் போட்டி நடைபெறும்போது திடலுக்கு அருகில் பாதுகாப்பு வீரர்கள் அதிகளவில் பணியமர்த்தப்படுவார்கள்.
வாழ்நாள் தடை
அந்தப் போட்டியில் அத்துமீறி உள்நுழைந்தவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு பாகிஸ்தானில் உள்ள அனைத்து கிரிக்கெட் திடலுலும் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இனிமேல் இதுபோல் நடக்காமல் இருக்க பாதுகாப்பை அதிகரித்துள்ளோம் என பிசிபி தெரிவித்துள்ளது.
இதுமாதிரி போட்டியின் நடுவே திடலில் ரசிகர்கள் உள்நுழைவது சாதரணமானதுதான். ஏற்கனவே பாகிஸ்தானில் 1996 உலகக் கோப்பையிலும் இதுபோல் நடந்தது.
ஏற்கனவே பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணி துபையில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.