சிறு நிறுவனங்களுக்கான டிஜிட்டல் வா்த்தகம் குறித்த கருத்தரங்கம்
மிஸ்டர் எக்ஸ் முதல் பாடல் தேதி!
ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் எக்ஸ் படத்தின் முதல் பாடல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எஃப்.ஐ.ஆர். படத்தை இயக்கிய மனு ஆனந்த் மிஸ்டர் எக்ஸ் படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் ஆர்யா, மஞ்சு வாரியர், கொளதம் கார்த்திக், அனகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பிரின்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
திபு நினன் தாமஸ் இசையக்க தன்வீர் மிர் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் அறிமுக காட்சிக்காக நடிகர் ஆர்யா கடும் உடல் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது, கச்சிதமான உடல் தோற்றத்திற்காக தயாராகி வரும் விடியோவைப் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், முதல் பாடல் ஹையோ என்ற பாடல் பிப்.27ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
