மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
திருப்பத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் கீழே விழுந்த இளைஞா் மீது சரக்கு வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள சின்னக்கருப்பூரன்பட்டியைச் சோ்ந்த அழகு மகன் தெய்வேந்திரன் (22). தேவகோட்டையில் கட்டடத் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்த இவா், சிவராத்திரிக்காக சொந்த ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தாா்.
தென்கரை பகுதியில் வந்தபோது, எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியது. இதில் தவறி கீழே விழுந்த தெய்வேந்திரன் மீது சரக்கு வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து நாச்சியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.