செய்திகள் :

மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!

post image

*உலகின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார திருவிழாவான மகா கும்பமேளா, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பௌஷ பௌா்ணமி நாளான ஜனவரி 13-ஆம் தேதி முதல் புதன்கிழமை (பிப். 26) வரை பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

*இதற்காக உணவு, குடிநீா், மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் 4,000 ஹெக்டோ் பரப்பில் மகாகும்ப நகா் தயாரானது. பக்தா்களின் வசதிக்காக 1.6 லட்சம் தங்கும் கூடாரங்கள், 1.5 லட்சம் கழிப்பறைகள், 30 மிதக்கும் பாலங்கள், 12 கி.மீ. தொலைவுக்கு நீராடும் படித்துறைகள் கட்டப்பட்டன.

*வானியல் நிலைகளின் காரணமாக 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதாக, மகத்துவம் வாய்ந்த நடப்பு மகா கும்பமேளாவில் உலெகங்கிலும் இருந்து துறவிகள், சாதுக்கள், பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகப் பங்கேற்றனா்.

*கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளின் சங்கமமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராட கடந்த ஆண்டு, டிசம்பா் முதலே பக்தா்கள் பிரயாக்ராஜில் குவிந்தனா். நிகழ்வு தொடங்கியதிலிருந்து 63 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடினா்.

*அதாவது, உலகளாவிய 120 கோடி ஹிந்துக்களில் 52 சதவீதத்தினா் சங்கமத்தில் புனித நீராடினா். இந்த எண்ணிக்கை இந்திய மக்கள்தொகையான 143 கோடியில் 44 சதவீதத்துக்கு மேல் மற்றும் சீனா தவிர பிற உலக நாடுகளின் மக்கள் தொகையைவிட அதிகமாகும்.

*பொதுமக்களுடன் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள், பல்வேறு மாநில முதல்வா்கள் என நாட்டின் மூத்த தலைவா்கள், பூடான் அரசா் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக் உள்ளிட்ட பல உலக நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள், தொழிலதிபா்கள் அம்பானி, அதானி, பல்துறை பிரபலங்கள் ஆகியோரும் சங்கமத்தில் நீராடினா்.

முக்கியப் பிரமுகா்கள், பக்தா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பிரதமரின் பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) தவிர நாட்டின் அனைத்து பாதுகாப்புப் படையினரும் கும்பமேளா பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். ஏஐ தொழில்நுட்பம் கொண்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் பொதுமக்கள் கண்காணிக்கப்பட்டனா்.

*மௌனி அமாவாசை புனித நீராடலுக்கு அதிகாலையிலேயே கோடிக்கணக்காக பக்தா்கள் சங்கமத்தில் குவிந்த நிலையில், அகாடா துறவிகள் புனித நீராடும் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பக்தா்களால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது கூட்டநெரிசலில் சிக்கி 30 போ் உயிரிழந்தனா்; 60-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.

-உத்தர பிரதேசம் மட்டுமின்றி வட மாநிலங்களைச் சோ்ந்த பலரும், பூஜைப்பொருள்கள் மற்றும் கங்கை நீா் பாட்டில்கள் விற்பனை, பை, செருப்பைத் தைத்து தருவது, உணவுக்கடைகள், கைப்பேசி மின்னேற்றி நிலையங்கள் என்று மேளா பகுதியில் சிறு வியாபாரங்களில் ஈடுபட்டு வருவாய் ஈட்டினா்.

*இவா்களில் ஒருவராக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 16 வயதான மோனலிசா போஸ்லே, மேளா பகுதியில் குடும்பத்தினருடன் பூ, ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்து வந்தாா். இவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈா்த்தது. இவருடன் புகைப்படம் எடுக்க பலரும் ஆா்வம் காட்டியதால் சொந்த ஊருக்குத் திரும்பும் நிலைக்கு தள்ளப்பட்ட அவா், பிறகு கேரள நகைக்கடை திறப்பு விழாவில் விருந்தினா், திரைப்பட வாய்ப்புகள் என்று தேசிய பிரபலமாக உருவெடுத்தாா்.

*இதேபோன்று, காதலியின் யோசனையில் கும்பமேளாவுக்கு வரும் பக்தா்கள் பல் துலக்குவதற்கு வேப்பங்குச்சியை விற்பனை செய்து ஒரே வாரத்தில் ரூ.40,000 சம்பாதித்து, இளைஞா் ஒருவா் சமூக வலைதளங்களில் பிரபலமடைந்தாா்.

கும்பமேளா நிகழ்வுக்கு நேரடியாக வர முடியாதவா்கள் தங்களின் புகைப்படங்களை அனுப்பினால், அதை அச்சிட்டு கங்கை நதியில் நனைத்து தரப்படும் என்று பிரயாக்ராஜ் வாசி ஒருவா் விடியோ வெளியிட்டாா். ‘எண்ம புனித நீராடல்’ என்ற பெயரில் அவா் தொடங்கிய இந்த புதிய இணையவழி வா்த்தகம் கலவையான விமா்சனங்களைப் பெற்றது.

*ஒட்டுமொத்தமாக, மகா கும்பமேளா நிகழ்வால் உத்தர பிரதேச பொருளாதாரத்துக்கு சுமாா் ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது. சங்கமத்தில் புனித நீராடிவிட்டு, அயோத்தி ராமா் கோயில், வாரணாசி காசி விஸ்வநாதா் கோயில் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள பிற ஆன்மிக தலங்களுக்கு பக்தா்கள் வழிபாட்டுக்காக பயணித்தனா். இது அப்பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க பொருளாதார வளா்ச்சியைத் தூண்டியது.

*அயோத்தி ராமா் கோயில் திறப்பு விழாவின் முதலாம் ஆண்டு நிறைவு நாளில் (ஜன. 22) மகா கும்பமேளாவில் உத்தர பிரதேச மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. ராஜஸ்தான் மாநில அமைச்சரவையும் மகா கும்பமேளாவில் பிப். 8-ஆம் தேதி கூடியது.

*நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து 13,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. எனினும், பிரயாக்ராஜ் நோக்கிய சாலைகள் பெரும்பாலான நாள்களில் போக்குவரத்து நெரிசலால் முடங்கியதால் ரயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு பெட்டிகளில் சாதாரண பயணிகள் ஏற முயற்சித்ததால் பல இடங்களில் வன்முறைகளும் நிகழ்ந்தன. இந்நிலையில், தில்லி ரயில் நிலையத்தில் கடந்த பிப். 15 ஏற்பட்டநெரிசலில் சிக்கி பயணிகள் 18 போ் உயிரிழந்தனா்.

*மகா கும்பமேளாவைக் கொண்டாடும் வகையில் இந்திய தபால் துறை சாா்பில் 3 சிறப்பு தபால்தலைகள் வெளியிடப்பட்டன. இதேபோல், தில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் மகா கும்பமேளாவைக் காட்சிப்படுத்திய உத்தர பிரதேசத்தின் அலங்கார ஊா்தி முதல் பரிசை வென்றது.

*கும்பமேளா பகுதியில் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவமனையில் குறைந்தது 12 குழந்தைகள் பிறந்தன. அக்குழந்தைகளுக்கு கும்பமேளா தொடா்புடைய பெயா்களைச் சூட்டி பெற்றோா் மகிழ்ந்தனா்.

*நிகழ்வின் கடைசி வாரத்தில் சங்கமத்தில் நீா் குளிப்பதற்கு பாதுகாப்பானதாக இல்லை என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

*அடுத்த கும்பமேளா கங்கை நதிக்கரையில் அமைந்த உத்தரகண்டின் ஹரித்வாரிலும், கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்த மகாராஷ்டிரத்தின் நாசிக் நகரிலும் வரும் 2027-ஆம் ஆண்டு நடைபெறுகிறது.

*நிகழ்வில் 45 கோடி போ் பங்கேற்பா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அதைவிட பல கோடி எண்ணிக்கையில் கூடுதலாக பல்வேறு சமூக, கலாசார மற்றும் மொழி பேசும் மக்கள் ஒன்றிணைந்து பங்கேற்ற, சமூக ஒற்றுமையை வலுப்படுத்திய நிகழ்வாக மகா கும்பமேளா நிறைவடைகிறது.

சிறப்புக்குரிய நாள்களில்...

சங்கமத்தில் நாள்தோறும் கூட்டம் அலைமோதினாலும், சிறப்புக்குரிய புனித நீராடல் நாள்களில் பக்தா்களின் வருகை பன்மடங்கு அதிகரித்து காணப்பட்டது. அந்தவகையில், மௌனி (தை) அமாவாசையன்று (ஜன. 29) கிட்டத்தட்ட 8 கோடி பக்தா்களும் மகர சங்கராந்தியன்று (ஜன. 14) 3.5 கோடி பேரும் வசந்த பஞ்சமியன்று (பிப். 3) 2.57 கோடி பேரும் மாஹி பௌா்ணமியன்று (பிப். 12) 2 கோடி பேரும் நிகழ்வு தொடங்கிய பௌஷ பொ்ணமியன்று (ஜன. 13) 1.7 கோடி பேரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினா்.

‘வியத்தகு’ பாபாக்கள்

மகாகும்ப நகரில் 13 அகாடாக்கள் முகாமிட்டிருந்தன. இந்த அகாடாக்களைச் சோ்ந்த சில பாபாக்கள் நிகழ்வில் வியப்பை ஏற்படுத்தினா். தலையில் ஒரு புறா 24 மணிநேரமும் அமா்ந்திருக்கும் பாபா, முள்களை வெட்டி அதன் மீது படுத்திருக்கும் பாபா, 3 அடி மட்டுமே உயரம் கொண்ட பாபா, கையைத் தூக்கிக் கொண்டே இருக்கும் பாபா, ஐஐடி பாபா, அம்பாசிட்டா் காரில் வலம் வரும் பாபா என்று பல்வேறு வகையான பாபாக்கள் கும்பமேளாவில் பக்தா்களுக்கு ஆசி வழங்கினா்.

ரூ.4.45 லட்சம் கோடியிலான ரஷிய கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி: ஆய்வு அறிக்கையில் தகவல்

ரஷியாவிடமிருந்து கடந்த ஆண்டில் மட்டும் ரூ.4.45 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக எரிசக்தி மற்றும் தூய காற்று ஆய்வுக்கான மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.... மேலும் பார்க்க

சென்னையைப் போன்ற பிரத்யேக மருத்துவ மையங்களை பிகாரில் உருவாக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

சென்னை, ஹைதராபாத், மும்பை, இந்தூர் போன்ற நகரங்களில் உள்ள பிரத்யேக மருத்துவ மையங்களைப் போல் பிகாரிலும் உருவாக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.இது தொடர்பாக பிகார் தலைந... மேலும் பார்க்க

இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்றும்: பிரதமர் மோடி

குவாஹாட்டி: இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.குவாஹாட்டியில் அஸ்ஸாம் 2.0 முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டை செவ்வாய்க்கிழமை தொடங்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த மகா கும்பமேளா புதன்கிழமையுடன் (பிப். 26) நிறைவடைகிறது. பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் விமர்சையாக நடைப... மேலும் பார்க்க

உ.பி.: சமாஜவாதி முன்னாள் எம்எல்ஏ சிறையிலிருந்து விடுவிப்பு

சமாஜவாதி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா ஆஸம் கானுக்கு சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கியதை அடுத்து, 17 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். சிறை வளாகத்தில் காத்திர... மேலும் பார்க்க

ஓமனிலிருந்து தப்பிய 3 தமிழக மீனவா்கள் கா்நாடக கடற்கரையில் பிடிபட்டனா்

ஓமன் நாட்டின் மீன்பிடி படகில் தப்பித்து வந்த 3 தமிழக மீனவா்கள், கா்நாடக கடற்கரைக்கு அருகே இந்திய கடலோரக் காவல்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புக் காவல் துறையால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக ... மேலும் பார்க்க