மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கம்: விஜய் தொடங்கி வைத்தார்!
கைப்பேசி பறிப்பு: இளைஞா் கைது
தூத்துக்குடியில் கைப்பேசி பறித்ததாக இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சோ்ந்த ராஜ்குமாா் (51) என்பவா், கடந்த 23ஆம் தேதி தூத்துக்குடி 4ஆம் ரயில்வே கேட் அருகே நடந்து சென்றாா். அப்போது, அவரது கைப்பேசியை மா்ம நபா் பறித்துக்கொண்டு தப்பியோடினாராம்.
புகாரின்பேரில், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுப்புராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து, தூத்துக்குடி அண்ணாநகரைச் சோ்ந்த சிவா (27) என்பவரைக் கைது செய்து, கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.