செய்திகள் :

தெலங்கானாவில் அனைத்து பள்ளிகளிலும் தெலுங்குப் பாடம் கட்டாயம்!

post image

தெலங்கானாவில் உள்ள அனைத்து விதமான பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப் பாடம் கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப் பாடம் கட்டாயமாக்கி சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால், முறையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது.

இதையும் படிக்க : தவெக 2-ஆம் ஆண்டு தொடக்க விழா: விஜய் - பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு!

இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிப் பிரச்னை தீவிரமடைந்துள்ள சூழலில், தெலுங்கு மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்கி மாநில கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

வருகின்ற 2025 -26 கல்வியாண்டு முதல் தெலுங்கானா மாநிலத்தில் செயல்படு சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி உள்பட அனைத்து பாடத்திட்டங்களில் இயங்கும் பள்ளிகளிலும் தெலுங்கு கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

1 முதல் 10ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தெலுங்கு கற்க வேண்டும் எனவும், வெளி மாநில மாணவர்கள் தெலுங்கு மொழியைக் கற்றுக் கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களை மாற்றி அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பமேளா நிறைவு நாள்: இதுவரை 81 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்!

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவின் கடைசி நாளான இன்று இதுவரை 81 லட்சம் பேர் புனித நீராடியுள்ளதாக அந்த மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் மகாசிவராத்திரி விழா கோலாகலமாகக் ... மேலும் பார்க்க

கௌரி சங்கர் கோயிலில் தில்லி முதல்வர் வழிபாடு!

மகாசிவராத்திரியை முன்னிட்டு கௌரி சங்கர் கோயிலில் தில்லி முதல்வர் ரேகா குப்தா வழிபாடு மேற்கொண்டார். நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் மகா சிவராத்திரிய... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜேஎம்எம் எம்பியின் கார் விபத்தில் சிக்கியது!

மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்த ஜேஎம்எம் எம்பி மஹுவா மாஜியின் கார் விபத்தில் சிக்கியதால் அவர் காயமடைந்தார். மாநிலங்களவை உறுப்பினரான மஹுவா மாஜி சென்ற கார் ஜார்க்கண்டின் லதேஹர் மாவ... மேலும் பார்க்க

பஞ்சாபில் கேஜரிவால் போட்டியில்லை! வேட்பாளர் அறிவிப்பு!

பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளாரை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளில் மட்டுமே வென்று ப... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி: மோடி, ராகுல் வாழ்த்து!

மகா சிவராத்திரி தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா இன்றிரவு கொண்டாடப்படவுள்ளது. நாட்டின் பல... மேலும் பார்க்க

ரூ.4.45 லட்சம் கோடியிலான ரஷிய கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி: ஆய்வு அறிக்கையில் தகவல்

ரஷியாவிடமிருந்து கடந்த ஆண்டில் மட்டும் ரூ.4.45 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக எரிசக்தி மற்றும் தூய காற்று ஆய்வுக்கான மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.... மேலும் பார்க்க