கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜேஎம்எம் எம்பியின் கார் விபத்தில் சிக்கியது!
மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்த ஜேஎம்எம் எம்பி மஹுவா மாஜியின் கார் விபத்தில் சிக்கியதால் அவர் காயமடைந்தார்.
மாநிலங்களவை உறுப்பினரான மஹுவா மாஜி சென்ற கார் ஜார்க்கண்டின் லதேஹர் மாவட்டத்தில் அதிகாலை 2.30 மணியளவில் ஹாட்வாக் கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலை-75இல் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
மாஜி உடனடியாக சதார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது, பின்னர் சிறந்த சிகிச்சைக்காக ரிம்ஸ்-ராஞ்சிக்கு பரிந்துரைக்கப்பட்டதாக சதார் காவல் நிலைய பொறுப்பாளர் துலர் சவுடே தெரிவித்தார்.
இந்த விபத்தில் மாஜியின் இடது மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டு ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். காரில் இருந்த அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
அவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் பிரயாக்ராஜிலிருந்து ராஞ்சிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் என்று அவர் கூறினார்.