தொட்டில் குழந்தை திட்டத்தில் வேலை: 8, +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தர்மரி மாவட்ட தொட்டில் குழந்தைகள் திட்டத்தின்கீழ் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு 8, பிளஸ் 2 முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் - 1
சம்பளம்: மாதம் ரூ.7,500
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி்: உதவியாளர்(பெண்கள்) - 2
சம்பளம்: மாதம் ரூ.4,500
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: காவலர் - 1
சம்பளம்: மாதம் ரூ.4,500
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: செவிலியர் - 1
சம்பளம்: மாதம் ரூ.7,500
தகுதி: செவிலியர் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் தகுதியானவர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும். நேர்முகத் தேர்வுக்கு வரும்போது தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட நகல்களை கொண்டு வரவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தர்மபுரி மாவட்டம் - 636 705
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலம் 28 ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.