செய்திகள் :

இந்தியன் - 3 அப்டேட்!

post image

நடிகர் கமல் ஹாசனின் இந்தியன் - 3 குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் கடந்த ஜூலை 12 அன்று உலகம் முழுவதும் வெளியானது.

லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றதுடன் கடுமையான இணைய கிண்டல்களை எதிர்கொண்டது. ஆனாலும், இந்தியன் - 3 டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இதையும் படிக்க: மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி - 2!

தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர் கேம் சேஞ்சர் படத்தில் கவனம் செலுத்தினார். அப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்த நிலையில், இந்தியன் - 2 தோல்வியால் இந்தியன் - 3 படப்பிடிப்பில் மேற்கொண்டு செலவு செய்ய லைகா விரும்பாததால் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த சில மாதங்களுக்குள் நடிகர் கமல் ஹாசனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு படப்பிடிப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

பைசன் வெளியீடு எப்போது?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விக்ரமின் மகனானதுருவ் விக்ரம், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் சினிமாவில்அறிமுகமானார... மேலும் பார்க்க

வீர தீர சூரன் மேக்கிங் விடியோ!

இயக்குநர் சு. அருண் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு வீர தீர சூரன் மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளனர்.சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்... மேலும் பார்க்க

925ஆவது கோல்: பெனால்டி வாய்ப்பை ஃபார்மில் இல்லாத வீரருக்கு விட்டுக்கொடுத்த ரொனால்டோ!

கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 925ஆவது கோலை அடித்து அசத்தினார். சௌதி புரோ லீக் போட்டியில் அல் நசீர் அணியில் ரொனால்டோ விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் அல் நசீர் அணி அல் வெகிதா அணியுடன் மோதியது. இதில் அல்... மேலும் பார்க்க

லக்கி பாஸ்கர் ஓடிடியிலும் சூப்பர் ஹிட்!

லக்கி பாஸ்கர் திரைப்படம் ஓடிடியிலும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.நடிகர் தனுஷின் வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி செளதரி, ராம்கி ஆகியோர் நடித்த லக்கி பாக்ஸர் ... மேலும் பார்க்க

காசியில்... சிவராத்திரி வழிபாட்டில் சின்ன திரை நாயகி!

சின்ன திரை நாயகி மதுமிதா சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். காசிக்குச் சென்றுள்ள அவர், சிவன் கோயில்களில் தரிசனம் செய்த விடியோக்களைப் பதிவிட்டு ரசிகர்களுக்கு சிவராத்திரி வாழ்த்துகளைத் தெரிவித்துள்... மேலும் பார்க்க

மெஸ்ஸி உள்பட 2 இன்டர் மியாமி வீரர்களுக்கு அபராதம்..!

எம்எல்எஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு மெஸ்ஸி உள்பட 2 இன்டர் மியாமி வீரர்களுக்கு அபராதம் விதித்துள்ளது.சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அமெரிக்காவின் சேஸ் திடலில் 2ஆவது லெக் சுற்றில் கான்ஸ்டாஸ் சிட்டியை 3-1 வீ... மேலும் பார்க்க