மகா சிவராத்திரி: மோடி, ராகுல் வாழ்த்து!
மகா சிவராத்திரி தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா இன்றிரவு கொண்டாடப்படவுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
“மகா சிவராத்திரி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் மகாதேவரின் ஆசீர்வாதம் நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்றும், நமது நாடு முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து முன்னேற வேண்டுமென்றும் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
“இந்த புனித நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். இந்த தெய்வீக நாள், உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கட்டும். அதே போல் வளர்ந்த இந்தியாவின் உறுதியை வலுப்படுத்தட்டும். ஹரஹர மகாதேவ்” எனப் பதிவிட்டுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
”மகா சிவராத்திரி திருநாளில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். சிவசக்தியின் ஆசிகள் எப்போதும் உங்கள் மீது நிலைத்திருக்கட்டும். ஹரஹர மகாதேவ்” எனக் குறிப்பிட்டுள்ளார்.