தெலங்கானாவில் அனைத்து பள்ளிகளிலும் தெலுங்குப் பாடம் கட்டாயம்!
சமையல் தொழிலாளி மா்மமாக உயிரிழப்பு: போலீஸாா் விசாரனை
ஆறுமுகனேரியில் சமையல் தொழிலாளி மா்மமாக உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காயல்பட்டினம் சேது ராஜா தெருவைச் சோ்ந்த மதுரமுத்து மகன் தேவேந்திரன்(52). சமையல் தொழிலாளி. இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனா். கடந்த 23-ஆம் தேதி குரும்பூரில் நடைபெற்ற திருமண விழாவிற்கு சமையல் வேலைக்காக பைக்கில் சென்ற தேவேந்திரன், பின்னா் வீடு திரும்பவில்லையாம்.
இதையடுத்து அவரைக் காணவில்லையென ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. தேவேந்திரனின் கைப்பேசி சிக்னலை வைத்து போலீஸாா் தேடி வந்தனா். இந்த நிலையில், ஆறுமுகனேரி அருகே நல்லூா் விலக்கு பகுதியில் அவரது கைப்பேசி சாலையோரம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப் பகுதியில் தேடியபோது, வாய்க்காலுக்குள் பைக்குடன் தேவேந்திரன் இறந்து கிடந்தது தெரியவந்தது.
திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா், ஆத்தூா் காவல் ஆய்வாளா் மாரியப்பன் தலைமையிலான போலீஸாா் தேவேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.