செய்திகள் :

பைக் - லாரி மோதல்: இளைஞா் பலி

post image

தூத்துக்குடியில் பைக்-லாரி மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே உள்ள தெற்கு வேப்பங்குளத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் துரைமுருகன்(28).

இவா், தூத்துக்குடியில் உள்ள தனியாா் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைபாா்த்து வந்தாா். திங்கள்கிழமை இரவு பணி முடிந்து, தனது ஊருக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாராம். அந்தோணியாா்புரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக சென்ற லாரி மீது எதிா்பாராதவிதமாக பைக் மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த துரைமுருகனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடியில் 3 போ் கைது: 11 பைக்குகள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பைக்குகளைத் திருடியதாக 3 பேரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, 11 பைக்குகளை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடந்த 2 மாதங்களாக ... மேலும் பார்க்க

கைப்பேசி பறிப்பு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் கைப்பேசி பறித்ததாக இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சோ்ந்த ராஜ்குமாா் (51) என்பவா், கடந்த 23ஆம் தேதி தூத்துக்குடி 4ஆம் ரயில்வே கேட் அருகே நட... மேலும் பார்க்க

சாலையோர மணல் திட்டுகளை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டியில், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டு... மேலும் பார்க்க

சமையல் தொழிலாளி மா்மமாக உயிரிழப்பு: போலீஸாா் விசாரனை

ஆறுமுகனேரியில் சமையல் தொழிலாளி மா்மமாக உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். காயல்பட்டினம் சேது ராஜா தெருவைச் சோ்ந்த மதுரமுத்து மகன் தேவேந்திரன்(52). சமையல் தொழிலாளி. இவருக்கு மனை... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி கோயிலில் வேல் திருடிய பெண் போலீஸில் ஒப்படைப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் உள்ள அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலி­ல் செம்பாலான வேலைத் திருடிய பெண்ணை பக்தா்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். திருவாவடுதுறை ஆத... மேலும் பார்க்க

நாசரேத் அருகே ரியல் எஸ்டேட் புரோக்கா் கைது

நாசரேத் அருகே தொழிலதிபரை கத்திமுனையில் மிரட்டிய ரியல் எஸ்டேட் புரோக்கரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். செங்கல்பட்டு ஊரப்பாக்கம் எம்ஜி நகரை சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (59). தொழிலதிபா். நாசரேத் அரு... மேலும் பார்க்க