மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கம்: விஜய் தொடங்கி வைத்தார்!
காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி மின் ஊழியா்கள் தா்னா
காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் சாா்பில் தருமபுரி மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன்பு தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு மாநில துணைத் தலைவா் பி.ஜீவா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் தீ. லெனின் மகேந்திரன், பொருளாளா் ஆா்.திம்மராயன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் சி. முரளி வாழ்த்தி பேசினாா்.
இதில் தமிழ்நாடு மின் வாரியத்தில் உள்ள 60,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்தடைகளை நீக்கும் பணிக்கு கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும். மின் வாரியத்தை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்.
ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை தொடங்கிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.