குளித்தலை அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் 5 பேர் பலி
கரூர்: கரூர் மாவட்டம், குளித்தலை அருகே காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர்.
கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த செல்வராஜ் தனது குடும்பத்தினருடன் தஞ்சாவூர் மாவட்டம். ஒரத்தநாடு கீழையூர் பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட காரில் சென்றுகொண்டிருந்தனர்.
கார் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து காரின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க |தவெக தலைவர் விஜய் வீட்டில் காலணி வீச்சு!
இந்த கோர விபத்தில் காரில் இருந்த செல்வராஜ் அவரது மனைவி கலையரசி, மகள் அகல்யா, மகன் அருண், கார் ஓட்டுநர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணு என ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.