தமிழர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம்: ஸ்ரீதர் வேம்பு
வணிகரீதியான வளர்ச்சிக்கு பொறியாளர்கள், தொழில்முனைவோர் ஹிந்தி கற்றுக்கொள்வது அவசியம் என ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
தில்லி, மும்பையில் பணியாற்றும் ஸோஹோ நிறுவன பொறியாளர்கள் மத்தியில் பேசிய ஸ்ரீதர் வேம்பு, தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் இருந்து வந்து பணிபுரியும் பொறியாளர்களுக்கு ஹிந்தி தெரியாமல் இருப்பது குறை என்றும் ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம் என்றும் கூறியுள்ளார்.
"இந்தியாவில் ஸோஹோ நிறுவனம் வேகமாக வளர்ந்து வருவதால், மும்பை, தில்லியில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராமப்புற பொறியாளர்கள் இருக்கிறார்கள் . எங்கள் வணிகத்தின் பெரும்பகுதி, தில்லி, மும்பை, குஜராத்தில் இருந்து நடைபெறுகிறது. எனவே, வணிக வளர்ச்சிக்கு ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஹிந்தி கற்றுக்கொள்ளாததது எங்களுக்கு கடுமையான குறைபாடாகும்.
ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம். கடந்த 5 ஆண்டுகளில் நான் ஹிந்தியை கற்றுக்கொண்டேன். இப்போது ஹிந்தியில் பேசப்படும் விஷயங்களில் சுமார் 20% என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவில் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் , தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார்.