செய்திகள் :

ரயில் நிலையத்தில் இந்திக்கு பதிலாக ஆங்கில எழுத்தை அழித்த திமுகவினர்... வைரலாகும் வீடியோ

post image

மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், கடந்த இரு தினங்களாக ரயில் நிலையத்தில் உள்ள ஊர் பலகைகளில் ஹிந்தி பெயர் எழுத்துகளை தி.மு.க.வினர் கருப்பு மை பூசி அழித்து ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, பாவூர்சத்திரம், செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில் ரயில் நிலையங்களில் ஊர் பெயர் பலகையில் உள்ள ஹிந்தி பெயரெழுத்துகளை அளித்தனர். இதன் ஒருபகுதியாக கடையநல்லூர் ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழிப்பதற்காக கடையநல்லூர் நகர தி.மு.க.வினர் வந்திருந்தனர்.

மத்திய அரசுக்கு எதிராகவும், ஹிந்தி திணிப்புக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறே ஊர் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை அழிக்க திமுகவினர் முற்பட்டனர். அப்போது இந்தி எழுத்துகளுக்கு பதிலாக, கடையநல்லூர் பெயர் பலகையில் உள்ள ஆங்கில எழுத்தின் மீது தி.மு.க.வினர் கருப்பு மை பூசி அழித்தனர். இதைப்பார்த்த கட்சிக்காரர்கள் கூச்சல் போட்டு ஹிந்தி எழுத்தை அடையாளம் காண்பிக்க, அதன்பிறகு சரியாக இந்தி எழுத்தின் மீது கருப்பு மை பூசினர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதை பார்த்த நெட்டிசன்கள், `இந்தி எது? இங்கிலீஷ் எதுவென்றே தெரியாமல் தி.மு.க.வினர் போராட்டம் நடத்துகின்றனர்' என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Doctor Vikatan: வைட்டமின் மாத்திரைகளை இப்படி எடுத்தால்தான் பலன் கிடைக்குமா..?

Doctor Vikatan:எந்தெந்த வைட்டமின்களை எப்படிச் சாப்பிட வேண்டும்... உதாரணத்துக்கு, இரும்புச்சத்துக்கானசப்ளிமென்ட் சாப்பிட்டால், கூடவே வைட்டமின் சியும் சேர்த்து எடுக்க வேண்டும் என்கிறார்களே... தனியே எடுத... மேலும் பார்க்க

குறையும் MP-க்கள்? Amit shah ஆக்‌ஷன்! Stalin வார்னிங்! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,'டார்கெட் 200' என்பதை நோக்கி புது புது வியூகங்களை வகுக்கும் மு.க ஸ்டாலின். அதை உடைக்க புது புது ஆபரேஷன்களை தொடங்கும் அமித் ஷா. லேட்டஸ்டாக எம்.பி தொகுதிகளை குறைக்கும் டெல்லி ம... மேலும் பார்க்க

TVK Vijay: கோலாகலமாக தொடங்கிய தவெக-வின் இரண்டாம் ஆண்டு! - மகிழ்ச்சியில் தொண்டர்கள்! - Photo Album

TVK இரண்டாம் ஆண்டு தொடக்க விழா TVK இரண்டாம் ஆண்டு தொடக்க விழா TVK இரண்டாம் ஆண்டு தொடக்க விழா TVK இரண்டாம் ஆண்டு தொடக்க விழா TVK இரண்டாம் ஆண்டு தொடக்க விழா TVK இரண்டாம் ஆண்டு தொடக்க விழா TVK இரண்டாம் ஆ... மேலும் பார்க்க

ஜி.கே.மணி இல்ல திருமண விழா தமிழக முதல்வர் முதல் நடிகர் விஜய் மகன் வரை பங்கேற்ற பிரபலங்கள்..!

சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே. மணி எம்எல்ஏவின் மைத்துனர் தன்ராஜ்- சாரதா ஆகியோரின் மகன் டாக்டர் சேது நாயக் மற்றும் கிருஷ்ணமூர்த்தி- விஜயலட்சுமி என்பவர்களின் மகள் டாக்டர் விமலாம்... மேலும் பார்க்க

UP-க்கு Plus TN -க்கு MINUS - BJP -ன் அடுத்த ஆட்டம்? | STALIN Vs MODI | ADMK | DMK | Imperfect Show

இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* சென்னையில் பாக்ஸிங் அகாடமியை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! * அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... ஏன்?* “மக்கள் தொகையைக் கட்டுப்படு... மேலும் பார்க்க