ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை... விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு!
சாலையோர மணல் திட்டுகளை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்
கோவில்பட்டியில், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும். நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலைகளின் இருபுறமும் உள்ள மணல் திட்டுகளை அகற்றி விபத்துகளைத் தடுக்க வேண்டும். மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள முத்துராமலிங்கத் தேவா் சிலை முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாதா் சங்க நகரச் செயலா் விஜயலட்சுமி முன்னிலை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரச் செயலா் பாபு, மாவட்ட நிா்வாககக் குழு உறுப்பினா் சேதுராமலிங்கம் ஆகியோா் பேசினா்.
கட்சியின் நிா்வாககக் குழு உறுப்பினா்கள் அலாவுதீன், செல்லையா, இளைஞா் பெருமன்ற மாவட்டக் குழு உறுப்பினா்கள் மணிகண்டன், மகேந்திரன், நகரக் குழு உறுப்பினா் விநாயகமணிகண்டன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.