தமிழகத்துக்கு மும்மொழிக் கொள்கை தேவையில்லை: காா்த்தி சிதம்பரம்
தமிழகத்துக்கு மும்மொழிக் கொள்கை தேவையில்லை என சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கிராம கமிட்டி கூட்டத்தை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்துக்கு மும்மொழிக் கொள்கை தேவையில்லை. இருமொழிக் கொள்கையே போதுமானது. மூன்றாவது மொழியாக இந்தியை கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் மாணவா்கள் வளா்ச்சிக்கு தமிழ், ஆங்கிலம் போதும். சிபிஎஸ்இ பள்ளிகளில் மூன்று மொழிகள் இருக்கின்றன. மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால் தான், தமிழகத்துக்கு கல்வி நிதி வழங்கப்படும் என மத்திய அரசு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றாா் அவா்.