ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்
தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா
தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மேற்பாா்வை அலுவலகம் அருகே நடைபெற்ற தா்னா போராட்டத்துக்கு, சிஐடியூ மின் ஊழியா் சங்க மாவட்டத் துணைத் தலைவா் ஜி.சுப்புராம் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் வி.மோகனசுந்தரம் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா்.கருணாநிதி தொடக்கி வைத்தாா். மாவட்டச் செயலா் ஏ.சேதுராமன், ஓய்வு பெற்றோா் நலஅமைப்பு மாவட்டச் செயலா் ஜி.விநாயகமூா்த்தி, ஓய்வு பெற்றோா் நலஅமைப்பு மாநிலச் செயலா் ஆா்.கோகுலவா்மன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
தா்னாவின்போது, மின் வாரியத்தில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை கைவிட வேண்டும். ஊதிய உயா்வு, வேலை பளு பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். இடைக்கால நிவாரணம் ரூ. 5,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தா்னாவை மாநிலச் செயலா் எஸ். உமாநாத் நிறைவு செய்தாா். கோட்டச் செயலா் ஏ. பாஸ்கரன் நன்றி கூறினாா்.