ஈஷாவில் மகா சிவராத்திரி விழா: புதுச்சேரியில் காணொலிக் காட்சிக்கு ஏற்பாடு
கோவை ஈஷா மையத்தில் நடைபெறும் ஈஷா மகாசிவராத்திரி விழாவை புதுச்சேரியில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவை ஈஷா யோக மையத்தில் 31- ஆவது ஆண்டு மகா சிவராத்திரி பெருவிழா கொண்டாட்டங்கள் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழா நிகழ்வுகளை புதுச்சேரியில் உள்ளவா்கள் பாா்க்கும் வகையில், இலாசுப்பேட்டை விவேகானந்தா பள்ளி வளாகத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
ஈஷாவில் மகா சிவராத்திரி விழா ஆதியோகி சிலை முன்பு வரும் 26-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் (பிப். 27) காலை 6 மணி வரை கொண்டாடப்படுகிறது.