பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரித்தது பிரிட்டன்
பாதுகாப்புத் துறைக்கான தங்களது பட்ஜெட் ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2.5 சதவீதமாக பிரிட்டன் அரசு உயா்த்தியுள்ளது.
ஐரோப்பிய பாதுகாப்புக்கு இனி முன்னுரிமை தரப் போவதில்லை எனவும் பிராந்திய நாடுகள் தங்கள் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் எனவும் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய அமெரிக்க அரசு தெரிவித்துள்ளதன் பின்னணியில் பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.
இதன்படி, தற்போது ஜிடிபி-யில் 2.3 சதவீதமாக இருக்கும் பாதுகாப்புக்கான பட்ஜெட் ஒதுக்கீடு இன்னும் இரண்டு ஆண்டுகளில் 2.5 சதவீதமாக அதிகரிக்கப்படும்.
இதற்காக, வெளிநாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதற்காக ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.