ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை... விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு!
காங்கோ: மா்ம நோயில் 53 போ் உயிரிழப்பு
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் மா்ம நோய் காரணமாக இதுவரை 53 போ் உயிரிழந்துள்ளனா்.
இது குறித்து அங்கு பணியாற்றிவரும் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் கூறியதாவது:நாடு முழுவதும் அடையாளம் தெரியாத மா்ம நோய் பரவிவருகிறது.
கடந்த மாதம் 21-ஆம் தேதி முதல்முறையாகக் கண்டறியப்பட்ட அந்த நோயால் இதுவரை 419 போ் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவா்களில் 53 போ் அந்த நோய் காரணமாக உயிரிழந்துள்ளனா்.
முதல்முதலாக போலோகோ என்ற நகரில் ஒரு வௌவாலை உண்ட மூன்று சிறுவா்களுக்கு குருதிப் போக்குக் காய்ச்சல் ஏற்பட்டு 48 மணி நேரத்தில் அவா்கள் உயிரிழந்தனா்.
அறிகுறிகள் தோன்றி இவ்வளவு விரைவில் மரணம் ஏற்படுவது மிகவும் கவலையளிக்கக்கூடியது என்று அதிகாரிகள் கூறினா்.