மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
சிவகங்கை மாவட்டத்தில் தீண்டாமை அதிகரிப்பு: புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி
சிவகங்கை மாவட்டத்தில் தீண்டாமை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் கூறியதாவது: மானாமதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, தேவகோட்டை, கண்ணனூா் உள்ளிட்ட பகுதிகளில் பட்டியலின மக்கள் மீதான தீண்டாமை தாக்குதல் அதிகரித்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக வாக்குறுதி அளித்த திமுக தற்போது, மத்திய அரசு மீது பழிபோடுகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் நடப்பதற்கு போதை பழக்கமே காரணம்.
வரும் டிசம்பரில் மதுரையில் கட்சியின் 6-ஆவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதில், 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான கூட்டணி வியூகங்கள் வகுக்கப்படும் என்றாா் அவா்.