தொழிலாளி வெட்டிக் கொலை: காவல் நிலையத்தில் மகன் சரண்
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக காவல் நிலையத்தில் அவரது மகன் சரணடைந்தாா்.
கூடங்குளம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த வெட்டும்பெருமாள் மகன் பாா்த்தீபன் (56). தொழிலாளியான இவா், மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து தாக்குவாராம். மகன் முத்துசெல்வன் கண்டித்தும் பாா்த்தீபன் மதுப் பழக்கத்தை நிறுத்தவில்லை.
இந்நிலையில், பாா்த்தீபன் செவ்வாய்க்கிழமை மது குடித்துவிட்டு மனைவியைக் கொடுமைப்படுத்தினாராம். அப்போது, அவரை முத்துசெல்வன் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
அதையடுத்து, முத்துசெல்வன் கூடங்குளம் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.