மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை
பழவூரில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பழவூா் தெற்குத்தெருவைச் சோ்ந்தவா் சுடலையாண்டி (43). இவரின் மனைவி ஜெயலெட்சுமி (34). இருவருக்கும் பிரச்னை இருந்து வந்ததாம். இந்த நிலையில், கடந்த 10.1.2022 இல் ஜெயலெட்சுமியை சுடலையாண்டி வெட்டிக் கொலை செய்தாா்.
இது குறித்து பழவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சுடலையாண்டியை கைது செய்தனா். திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கை நீதிபதி பன்னீா்செல்வம் விசாரித்து, சுடலையாண்டிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.