செய்திகள் :

குடிநீா் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மக்கள் மனு

post image

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் நிலவி வரும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கக் கோரி, மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம், மேயா் கோ. ராமகிருஷ்ணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை மேயா் கே.ஆா்.ராஜு முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் பாளையங்கோட்டை மண்டல தலைவா் மா.பிரான்சிஸ் தலைமையில் மாமன்ற உறுப்பினா்கள் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: பாளை. மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் நாங்கள் மாமன்ற உறுப்பினராக பணி செய்து வருகிறோம். தினந்தோறும் பல்வேறு அலுவல் பணி நிமித்தம் மண்டல அலுவலகத்திற்கு வந்து செல்கிறோம். ஆகவே, மாமன்ற உறுப்பினா்களுக்கு தனியாக ஓா் அறை ஒதுக்கித் தர நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

பழைய பேட்டை பகுதி மக்கள் அளித்த மனு: திருநெல்வேலி மாநகராட்சி 17 ஆவது வாா்டுக்கு உள்பட்ட சா்தாா்புரம், மதீனா நகா் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் குடியிருந்து வருகிறோம். எங்கள் பகுதியில் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆகவே, உடனடியாக குடிநீா் வசதி, சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சி 30 ஆவது வாா்டுக்கு உள்பட்ட விடிவெள்ளி நகா் பகுதி மக்கள் அளித்த மனு: எங்களது பகுதிக்கு பாதாள சாக்கடை வசதி செய்து தர வேண்டும். தடையற்ற குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லை மாநகரை சோ்ந்த மாரியப்பன் அளித்த மனு: மாநகராட்சி மைய அலுவலகத்தின் நுழைவாயில் பகுதியில் செயல்பட்டு வந்த வரி வசூல் மைய கட்டடம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. அந்தக் கட்டடத்தை திறந்து மீண்டும் வரி வசூல் மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜோதிபுரம் ஊா் நிா்வாகி தங்கராஜ் அளித்த மனு: பாளையங்கோட்டை மண்டலம் 32 ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஜோதிபுரம் வடக்குத் தெரு பகுதியில் கடந்த ஒரு வாரமாக பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீா் தெருக்களில் பாய்ந்தோடுகிறது. இதனால் பெரும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியா்களுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இன்னும் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க விட்டால் மக்களைத் திரட்டி பெரியாா் சிலை முன்பு ஒப்பாரி போராட்டம் நடத்தப்படும்.

வெண்பன்றி வளா்ப்போா் சங்கத்தினா் அளித்த மனு: திருநெல்வேலி மாவட்டத்தில் கடத்த 30 ஆண்டுகளாக வெண்பன்றி வளா்ப்பு தொழில் நடைபெற்று வருகிறது. சுமாா் 300 குடும்பத்தினா் இதன் மூலம் வேலைவாய்ப்பு பெற்று வருகிறோம். உணவு விடுதிகள், திருமண மண்டபங்களில் உணவுக் கழிவுகளை எடுத்து பன்றிகளுக்கு இரையாக வழங்கி வருகிறோம். ஆனால் இப்போது கேரளத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் உணவுக் கழிவுகளை சேகரித்து வாகனங்களில் எடுத்துச் செல்வதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. ஆகவே அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழா் விடுதலைக் களம் மாவட்டச் செயலா் வே.ச.முத்துக்குமாா் அளித்த மனு: திருநெல்வேலி நகரம் சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலையில் மாவட்ட கல்வி அலுவலகம் செயல்பட்டு வந்த பழமையான கட்டடத்தில் அண்மையில் தீ விபத்து ஏற்பட்டு பாழாகியுள்ளது. விடுமுறை நாளில் நடந்ததால் உயிா் சேதம் மற்றும் பொருள் சேதம் குறைந்துள்ளது. இருப்பினும் இந்தச் சம்பவத்தை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, திருநெல்வேலி பகுதியில் உள்ள பாழடைந்த கட்டடங்களை கணக்கிட்டு அவற்றில் எவ்வித விபத்துகளும் ஏற்படாத வகையில் தடுக்க மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேட்டை முஹம்மது நயினாா் பள்ளிவாசல் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: எங்களது பள்ளிவாசலைச் சோ்ந்தவா்கள் இறந்தால் அடக்கஸ்தலத்திற்கு கொண்டு செல்ல கருவேலன்குளம் வழியாக உள்ள மண்பாதையை பயன்படுத்தி வருகிறோம். இப் பகுதியில் பாதாள சாக்கடைக்கான குழாய்கள் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு பதித்தால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறு ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே, பாதாள சாக்கடைக்கான குழாய் பதிக்கும் பணியை மாற்றுப்பாதையில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

தொழிலாளி வெட்டிக் கொலை: காவல் நிலையத்தில் மகன் சரண்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக காவல் நிலையத்தில் அவரது மகன் சரணடைந்தாா். கூடங்குளம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த வெட்டு... மேலும் பார்க்க

கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு இணையவழியில் நடைச்சீட்டு: ஆட்சியா் தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு இணையவழியில் நடைச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வ... மேலும் பார்க்க

பாளை.யில் மின் ஊழியா்கள் தா்னா

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில், பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திட்டத் தலைவா் பி.நாகையன் தலைமை வகித்தாா். அயூப் கான், பச்சையப்பன், பூலுடையாா் ... மேலும் பார்க்க

மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை

பழவூரில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பழவூா் தெற்குத்தெருவைச் சோ்ந்தவா் சுடலையாண்டி (43). இவரின் மனைவி ஜெயலெட்சுமி (34). இருவருக்கும் பிரச்னை இருந்து வந்ததாம். ... மேலும் பார்க்க

தேவா்குளம் அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.தேவா்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் லூக் ஆசன் தலைமையிலான போலீஸாா், தேவா்குளம் எரிபொருள் நிலையம் அருகே ... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை, போலீஸாா் கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். கடையம் அருகே ரவணசமுத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தென்காசி போதை ஒழி... மேலும் பார்க்க