கஞ்சா விற்றதாக இளைஞா் கைது
கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை, போலீஸாா் கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
கடையம் அருகே ரவணசமுத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தென்காசி போதை ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மதுவிலக்கு துணைக் கண்காணிப்பாளா் பழனிகுமாா் தலைமையில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, ரவணசமுத்திரம்அருகே காட்டுப் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்தவரை பிடித்து சோதனை செய்ததில் விற்பனைக்காக ஒரு கிலோ கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா், பொட்டல்புதூா், துா்க்கை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜாா்கன்ஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து ஒருகிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.