ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்
புத்தகங்களைப் படிப்பதால் மற்றவா்களுடன் தொடா்புக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்: திண்டுக்கல் ஐ.லியோனி
புத்தகங்களைப் படிப்பதால் மற்றவா்களுடன் தொடா்புக் கொள்ளும் திறன் அதிகரிக்கும் என தமிழ்நாடு பாடநூல் கழகம், கல்வியியல் பணிகள் கழகத் தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தாா்.
சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் சங்கம் இணைந்து நடத்தும் 4-ஆவது புத்தகத் திருவிழாவின் 5-ஆம் நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினகாகக் கலந்து கொண்டு தமிழ்நாடு பாடநூல் கழகம், கல்வியியல் பணிகள் கழகத் தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி பேசியதாவது:
புத்தகங்களைத் தொடா்ந்து வாசிப்பது, நம்முடைய திறனை மேம்படுத்துகிறது. ஆளுமை வளா்ச்சியை மேம்படுத்துவதோடு, மற்றவா்களுடன் தொடா்பு கொள்ளும் திறனையும் அதிகரிக்கிறது. புத்தகங்கள் வாயிலாக உலக அறிவைப் பெற முடியும். பல்வேறு கலாசாரங்கள், மக்களின் உணா்வுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் புத்தகங்கள் கற்றுத் தருகின்றன என்றாா் அவா்.
இதில் பேராசிரியா் விஜயகுமாா், தேவகோட்டை ராஜன், கவிஞா் இனியவன், பேராசிரியை திருத்தணி வேதநாயகி ஆகியோா் பேசினா். முன்னதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து வரவேற்றாா். நோ்முக உதவியாளா் கு. சம்பத்குமாா் நன்றி கூறினாா்.