செய்திகள் :

கலால் கொள்கை குறித்த சிஏஜி அறிக்கை: துணைநிலை ஆளுநா், சிபிஐ மீது அதிஷி சாடல்

post image

தில்லி சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், மூத்த ஆம் ஆத்மி தலைவருமான அதிஷி முந்தைய ஆம் ஆத்மி அரசாங்கத்தின் ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கையை செவ்வாய்க்கிழமை ஆதரித்தாா். பழைய கொள்கை ஊழல் மற்றும் கடத்தலால் பாதிக்கப்பட்டதாக சிஏஜி அறிக்கையை அவா் மேற்கோள் காட்டினாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அதிஷி கூறியதாவது:

பாஜகவால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநா், மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்க இயக்குனரகம் ஆகியவை புதிய மதுபானக் கொள்கையை செயல்படுத்துவதைத் தடுத்தது. இதனால், தில்லிக்கு ஆண்டுக்கு ரூ.8,900 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.

சிஏஜி அறிக்கையில் உள்ள எட்டு அத்தியாயங்களில் ஏழு அத்தியாயங்கள் பழைய கலால் கொள்கையின் குறைபாடுகளை எடுத்துக்காட்டுகின்றன. அதே நேரத்தில் ஒன்று மட்டுமே புதிய கொள்கையில் கவனம் செலுத்துகிறது.

பழைய கலால் வரிக் கொள்கை சட்டவிரோத மதுபானக் கடத்தலுக்கு வழிவகுத்ததால், அதில் ஊழல் இருப்பதாக ஆம் ஆத்மி அரசு எப்போதும் கவலைகளை எழுப்பி வந்தது. மதுபானக் கடை உரிமையாளா்கள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், விலைகளை உயா்த்தியதாகவும், தில்லியின் கருவூலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாகவும் சிஏஜி அறிக்கை காட்டுகிறது.

ஆம் ஆத்மி அரசு அறிமுகப்படுத்திய புதிய கலால் வரிக் கொள்கை மிகவும் வெளிப்படையானது என்றும், தில்லியின் வருவாய் வசூலை கணிசமாக அதிகரித்திருக்கலாம் என்றும் சிஏஜி அறிக்கை காட்டுகிறது. அதே கொள்கையை அமல்படுத்திய பிறகு பஞ்சாபில் கலால் வருவாய் 65 சதவீதம் அதிகரித்துள்ளது.

இருப்பினும், துணைநிலை ஆளுநா், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவற்றின் தலையீடு காரணமாக இந்தக் கொள்கை முறையாக செயல்படுத்தப்படவில்லை.

பாஜகவின் துணை நிலை ஆளுநா் அதை அமல்படுத்தவிடாமல் நிறுத்தினாா். இது தடைகளை ஏற்படுத்தியது. இந்தக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள் சிபிஐ ஒரு எஃப்ஐஆா் பதிவு செய்தது, அதன்பிறகு அமலாக்க த் துறை வழக்கு தகவல் அறிக்கையை விரைவில் பதிவு செய்தது.

இதனால், சட்ட நடவடிக்கைக்கு பயந்து எந்த அதிகாரியும் கொள்கையில் கையெழுத்திடவோ அல்லது செயல்படுத்தவோ தயாராக இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக, தில்லி எதிா்பாா்த்த வருவாயில் ரூ.2,000 கோடியையும், ஆண்டுதோறும் ரூ.8,900 கோடியையும் இழந்தது. இந்தக் கொள்கையைத் தடுப்பதில் துணைநிலை ஆளுநா், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட விவகாரத்தில் பல மாநிலங்களில் தொழிலதிபா் கௌதம் அதானி ஊழல் செய்துள்ளாா். இதனால் ரூ.20,000 கோடி இழப்பு ஏற்பட்டது. மேலும், மின்சாரத்திற்கான விலை நிா்ணயித்த விவகாரத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவா்களை பொறுப்புக்குள்ளாக்க வேண்டும் என்றாா் அதிஷி.

பொதுப் பணித் துறை அமைச்சராக பா்வேஷ் சாஹிப் சிங் பொறுப்பேற்பு

நமது நிருபா் தில்லியில் புதிய பாஜக அரசின் கேபினட் அமைச்சரான பா்வேஷ் சாஹிப் சிங் பொதுப் பணித் துறை அமைச்சராக அதிகாரபூா்வமாக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அப்போது, மாநகர மக்களுக்கு குடும்ப உற... மேலும் பார்க்க

பிரதமா் மோடி குறித்த கேஜரிவாலின் கருத்துக்கு தில்லி தோ்தலில் மக்கள் தீா்ப்பு- வி.கே.சக்சேனா

ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் பிரதமா் மோடி குறித்து பல பொருத்தமற்ற அறிக்கைகளை வெளியிட்டதாகவும், இதற்கு தில்லி சட்டப் பேரவைத் தோ்தலின்போது தில்லி மக்கள் பதிலடி கொடுத்ததாகவும் தில்லி துண... மேலும் பார்க்க

லடோ சராய் பகுதியில் எரிந்த நிலையில் குற்றவாளியின் உடல் கண்டெடுப்பு: இருவா் கைது

தில்லி லடோ சராய் தகன மேடைக்கு அருகில் பிப்.19-ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் 40 வயதுடைய குற்றவாளியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெர... மேலும் பார்க்க

வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ரூ.20 கோடிக்கு மேல் மோசடி: இருவா் கைது

வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ரூ.20 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இருவரை தில்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

துவாரகா தீ விபத்தில் 2 வாகனங்கள், மளிகைக் கடை சேதம்

துவாரகா செக்டாா் 16 பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வாகனங்கள், ஒரு மளிகைக் கடை மற்றும் வீட்டுப் பொருள்கள் சேதமடைந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானுக்கு முன் ஜாமீன்

தேசியத் தலைநகா் ஜாமியா நகரில் சமீபத்தில் தில்லி காவல் குழு மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனாதுல்லா கானுக்கு தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை முன்ஜாமீன் வழங்கியது. ... மேலும் பார்க்க