ஏற்காட்டில் வீட்டுமனை பட்டா கோரி ஆா்ப்பாட்டம்
ஏற்காட்டில் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அண்மையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஏற்காடு வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக் கட்சின் ஒன்றியச் செயலாளா் நேரு தலைமை வகித்தாா். முத்து கண்ணன் கண்டன உரையாற்றினா். அதன்பிறகு கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஏற்காடு வட்டாட்சியரிடம் வழங்கினா்.
அதில் ஏற்காடு முருகன் நகா், எம்ஜிஆா் நகா், லாங்கில் மாநகா், ஜெரினாகாடு, பட்டிப்பாடி நடூவுா் ஆகிய கிராமங்களில் நீண்ட காலமாக வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனா்.