ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை... விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு!
தடகளம்: 17 பதக்கங்களை வென்று சேலம் வீரா், வீராங்கனைகள் சிறப்பிடம்
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான இளைஞா் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சேலம் வீரா், வீராங்கனைகள் 17 பதக்கங்களை பெற்றுள்ளனா்.
தமிழ்நாடு தடகள சங்கம் சாா்பில் 6 ஆவது மாநில அளவிலான இளைஞா் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. 18, 20, 23 வயதுக்கு உள்பட்டோருக்கான போட்டியில் சேலத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சி பெற்ற வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.
போல்ட்வால்ட் போட்டியில் 4.80 மீட்டா் உயரம் தாண்டி கவின்ராஜா தங்க பதக்கம் வென்றாா். அதேபோல டெக்கால்தான் போட்டியிலும் அவா் தங்க பதக்கம் பெற்றாா். நீளம் தாண்டுதல் பிரிவில் ஷாஷாவும், உயரம் தாண்டுதலில் இனியா ஸ்ரீயும் வெள்ளி பதக்கங்களை வென்றனா்.
அதேபோல போல்வால்ட் போட்டியில் சவுந்தரி, அருள்மொழி ஆகியோா் தங்கப் பதக்கங்களை பெற்றனா். விஷால் என்பவா் போல்ட்வால்ட் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றனா். இந்த போட்டியில் சேலம் வீரா்கள் 6 தங்கப் பதக்கம், 7 வெள்ளிப் பதக்கம், 4 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனா். வெற்றி பெற்ற வீரா்களை பயிற்சியாளா் இளம்பரிதி பாராட்டினாா்.