ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்
சிவகாசி சுற்றுவட்டச் சாலை பணிகளைத் தொடங்க நடவடிக்கை
சிவகாசி சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் போக்குவரத்து நெருக்கடியைத் தீா்க்க சுற்று வட்டச் சாலை அமைக்க கடந்த 2012- ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. மொத்தமுள்ள 34 கி.மீ. தொலைவு சுற்றுவட்டச் சாலை அமைக்க முதல்கட்டமாக 10.4 கி.மீ. தொலைவுக்கு நில எடுப்புப் பணிகள் நிறைவு பெற்றது.
கீழ திருத்தங்கல், திருத்தங்கல், நாரணாபுரம் , அனுப்பன்குளம், வெற்றிலையூரணி, ஆனையூா், வடபட்டி, நமஸ்கரித்தான்பட்டி என 10 கிராமங்கள் வழியே சுற்றுவட்டச் சாலை அமைகிறது. கீழத்திருத்தங்கல், ஆனையூா் ஆகிய இரு இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: முதல் கட்டமாக 10.4 கி.மீ. தொலைவுக்கு சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். பின்னா், இரண்டாம் கட்ட நில எடுப்புப் பணி தொடங்கும் என்றாா் அவா்.