மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
விவசாயத் தொழிலாளா்கள் மனு கொடுக்கும் போராட்டம்
விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் சாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில், சாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மனுக் கொடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் முனிராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்தாா். இதில் இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா், சிஐடியு அமைப்பினா் கலந்து கொண்டனா். இதில் தேசிய ஊரக வேலைத் திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனா்.