பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி
ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள திருவண்ணாமலை ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஊதியம் வழங்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி செய்த தொழிலாளா்களுக்கு 6 வாரங்களாக ஊதியம் வழங்கப்பட வில்லை என கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா். ஊதியம் வழங்கப்படாத நிலையில் திங்கள்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனா்.

அப்போது, பணியாளா்களின் வங்கிக் கணக்கில் உடனடியாக ஊதியத்தை வரவு வைக்க வேண்டும். வீட்டுத் தீா்வை, குடிநீா் வரி செலுத்தினால் மட்டுமே வேலை வழங்கப்படும் என காட்டுப்பாடு விதித்துள்ளனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.