இந்தியாவின் பி டீமை வீழ்த்துவதும் பாகிஸ்தானுக்கு கடினம்: முன்னாள் இந்திய கேப்டன்
இந்திய அணியின் பி டீமை வீழ்த்துவதும் பாகிஸ்தானுக்கு கடினம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நேற்று முன் தினம் (பிப்ரவரி 23) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். இந்திய அணி அரையிறுதிக்கும் தகுதி பெற்றது.
இதையும் படிக்க: விராட் கோலியின் சதத்துக்காக மனித கால்குலேட்டராக மாறிய அக்ஷர் படேல்!
சுனில் கவாஸ்கர் விமர்சனம்
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், பாகிஸ்தான் அணி தற்போதுள்ள ஃபார்மில் இந்தியாவின் பி டீமை வீழ்த்துவதும் மிகவும் கடினம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தான் அணி தற்போது உள்ள ஃபார்மில் இந்தியாவின் பி டீமிடம் வெற்றி பெறுவதும் மிகவும் கடினம். இந்தியா சி டீமை வெற்றி பெறுவார்களா? மாட்டார்களா? என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. பாகிஸ்தான் அணியில் கூடுதலாக நிறைய வீரர்கள் இல்லாததது ஆச்சரியமாக இருக்கிறது. பாகிஸ்தானின் உள்ளூர் போட்டிகள் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் தொடர்ந்து நடைபெறும் போதிலும், அந்த அணியால் தேசிய அணிக்கான தரமான வீரர்களை உருவாக்க முடியவில்லை.
இதையும் படிக்க: இந்த பாக். அணியை தோனியே வழிநடத்தினாலும் ஒன்றும் செய்யமுடியாது..!
இந்திய அணி எப்படி இத்தனை இளம் வீரர்களை உருவாக்கியுள்ளது. அதற்கு காரணம் இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடர். ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் அங்கிருந்து ரஞ்சி போட்டிகளில் விளையாடுகின்றனர். அதன் பின், அவர்கள் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடுகிறார்கள். இதனை பாகிஸ்தான் அணி ஆராய்ந்து தரமான வீரர்கள் அணியில் இடம்பெறாததற்கான காரணங்களை கண்டறிய வேண்டும் என்றார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளிடம் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.