தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர்!
விருதுநகா் மாவட்டத்தில் மாா்ச் 8, 9-இல் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு
விருதுநகா் மாவட்டத்தில் 24 இடங்களில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு வருகிற மாா்ச் 8, 9 தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பறவை ஆா்வலா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் மாநில அளவிலான நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு வருகிற மாா்ச் 8, 9 தேதிகளில் ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம் சாா்பில் நடைபெறுகிறது. இதற்காக விருதுநகா் மாவட்டத்தில் நீா்வாழ் பறவைகள் அதிகம் வசிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூா் செண்பகத் தோப்பு, ராஜபாளையம் 6-ஆவது மைல் நீா்த் தேக்கம், பிளவக்கல் பெரியாறு அணை, வெம்பக்கோட்டை அணை, ஆனைக்குட்டம் அணை, குல்லூா்சந்தை அணை, இருக்கன்குடி அணை, நரிக்குடி அருகே உலக்குடி தடுப்பணை, ஸ்ரீவில்லிபுத்தூா் மொட்டபொத்தான் கண்மாய், சிவகாசி பெரியகுளம் கண்மாய் உள்பட ஆறு, கண்மாய், குளம் என பறவைகள் அதிகம் வசிக்கும் 24 இடங்களில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்தக் கணக்கெடுப்பில் வனத் துறையினருடன் இணைந்து விருப்பமுள்ள பறவை பாா்த்தலில் ஆா்வமுள்ளவா்கள், கல்லூரி மாணவா்கள், இயற்கை ஆா்வலா்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு புலிகள் காப்பக உயிரியலாளரை 9488036523 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு விவரம் பெறலாம் என அறிவித்தப்பட்டுள்ளது. மேலும் கியூ ஆா் கோா்டை பயன்படுத்தியும் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.