119 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் பிரபல கடையின் மாத வாடகை ரூ.3 கோடியா?
மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் ஜாரா நிறுவனத்தின் மாத வாடகை சுமார் ரூ.3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தெற்கு மும்பையின் கோட்டைப் பகுதியில் ஸ்பானிஸ் ஃபேஷன் பிராண்ட் நிறுவனமான ஸாரா கடந்த 8 ஆண்டுகளாக இயங்கிவந்த நிலையில், தங்களது பிரபல கடையான சோபோவை(SoBo) மூடியுள்ளது.
துணிகளுக்கு பிரபலமான ஸாரா இந்தக் கடைக்கு மாத வாடகையாக ரூ.3 கோடி செலுத்தி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அந்தக் கடையின் வெளியில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஸாரா நிறுவனம் 2016 ஆம் ஆண்டு அந்தக் கடையை மாத வாடகையாக ரூ.2.25 கோடி வீதம் 21 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்ததாகக் கூறப்படுகிறது.
மிகவும் பிரபலமான இந்த இடத்தில் ஹௌஸ் பாப்-அப் என்னும் கடை அமைக்கப்படவுள்ளது. இந்த நிறுவனத்தினர் 15 ஆண்டுகளுக்கு இந்த இடத்தில் வாடகைக்கு இருக்கப்போவதாகவும், இன்னும் 5 ஆண்டுகளில் இந்த வாடகை பல மடங்கு உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.